இலங்கைக்கான டீசல் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வழங்க ஒப்புதல்!

Editor 1

சிங்கப்பூரின் பிபி எனர்ஜி நிறுவனத்திற்கு எதிர்வரும்
டிசெம்பர் 15ஆம் திகதி முதல் 6 மாதங்களுக்கு இலங்கைக்கான டீசல் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்பட்ட விலை மனுக்களைத் தொடர்ந்து இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் டிசெம்பர் 15 ஆம் திகதி முதல் அடுத்த வருடம் ஜூன் மாதம்
14ஆம் திகதி வரையிலான 6 மாத காலத்திற்கு 4 கப்பல் டீசல் தொகையை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்திற்காகச் சிங்கப்பூரின் பிபி எனர்ஜி
நிறுவனம் விலை மனுவைச் சமர்ப்பித்தது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்துக்கு
வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Share This Article