அரச பணியாளர்களின் வேதனம் அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி!

அரச பணியாளர்களின் வேதனம் அதிகரிக்கப்படும் - ஜனாதிபதி!

Editor 1

அரச பணியாளர்களின் வேதனம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தி, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் எமக்கு சிறந்த கடல் வளம் காணப்படுகிறது. 

அதனைப் பயன்படுத்தி இலங்கையை கடல்சார் வர்த்தக மையமாக மாற்ற வேண்டும். 

அதேபோன்று விவசாயிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். சர்வதேச நாடுகளுடன் போட்டியிடக் கூடிய விவசாயிகள் இலங்கையில் உள்ளனர். 

அவர்களைக் கடனற்றவர்களாக மாற்ற வேண்டும். 

குறிப்பாக விதை ஆராய்ச்சி நிலையத்தை அபிவிருத்தியடைய செய்ய வேண்டும். 

மீண்டும் பலமானதொரு விவசாய சூழல் உருவாக்கப்பட வேண்டும். 

ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

இதனடிப்படையிலேயே விவசாய நிவாரணம் 25 ,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் கடற்றொழில் இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றது. 

கடந்த காலங்களில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியின் போது கடற்றொழிலாளர்கள் வெகுவாக பாதிப்படைந்தனர். 

எனவே, கடற்றொழிலாளர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

நீண்டகால பொருளாதார நடவடிக்கைகளின் கீழ் இலங்கையின் கனியவளம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்.

இலங்கையின் கனியவள துறையை நாட்டின் பொருளாதாரத்தைப் பயனளிக்கும் வகையில் மாற்ற வேண்டும். 

அரசாங்கத்தினால் மாத்திரம் தனித்து இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது. 

இதற்காகத் தனியார் துறையினரையும் இணைத்துக் கொள்ள வேண்டும். 

அதேநேரம் சர்வதேச சந்தையில் பங்காளராக இலங்கையை மாற்ற வேண்டும். 

இதற்காகத் தகவல் விஞ்ஞான துறையை புதிய யுகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

இதேவேளை, அஸ்வெசும கொடுப்பனவு உரிய அளவில் அதிகரிக்கப்படும். 

பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தினால் நிவாரணம் வழங்கப்படும். 

அரச பணியாளர்களின் வேதனம் அதிகரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share This Article