சபாநாயகராக அசோக ரங்வெல தெரிவானார்!

சபாநாயகராக அசோக ரங்வெல தெரிவானார்!

Editor 1

புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வெல வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு வைபவரீதியாக ஆரம்பமான நிலையில், பத்தாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பில் ஜனாதிபதி பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு அறிவித்தார்.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வெல சபாநாயகராக வாக்கெடுப்பின்றி நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக பதவி பிரமாணம் செய்துக் கொண்டனர்.

இதையடுத்து, புதிய சபாநாயகருக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், புதிய சபாநாயகருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வாழ்த்து தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்,

புதிதாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவரை சபாநாயகராக நியமித்துள்ளதை வரவேற்கிறேன். மக்களாணைக்கு தலை வணங்குகிறேன் என்றார்.

இதன்போது கருத்தவெளியிட்ட சபாநாயகர் அசோக ரங்வெல, பாராளுமன்றத்தின் கௌரவம் மற்றும் சுயாதினத்தை முழுமையாக பாதுகாப்பேன். சகல உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பேன். அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

Share This Article