சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகளை விடுவிப்பதுடன், முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக்கூட்டம் வவுனியா நகரசபை விளையாட்டுமைதானத்தில் இன்று மாலை இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டு வன்னி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றியிருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.