மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை – உப்போடை பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த நபர் உட்பட இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.