அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 47 ஆவது ஜனாதிபதியாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவாகியுள்ளார்.
ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹரிஸும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் போட்டியிட்டனர்.
அதில் வெற்றிபெற்று மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார்.
2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக பதவி வகித்த ட்ரம்ப், 2020 தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்ததை அடுத்து மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்ப முயன்றுள்ளார்.
அதேநேரம், ஹாரிஸ் 2021 ஜனவரி முதல் துணைத் தலைவராக பணியாற்றுகிறார்.
ஒரு வேட்பாளருக்கு தேர்தலில் வெற்றிபெற 538 தேர்தல் வாக்குகளில் குறைந்தது 270 தேவை.
அதாவது, அமெரிக்க ஜனாதிபதியை மக்கள் நேரடியாக தேர்ந்து எடுப்பதில்லை. எலெக்ட்ரோல் காலேஜ் (தேர்வுக்குழு உறுப்பினர்கள்) முறைப்படி வாக்குப்பதிவு நடக்கிறது.
மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.
இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள்.
அமெரிக்காவில் 16 கோடியே 50 பேர், வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள். இதில் 7 கோடிக்கும் அதிகமானோர் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர்.
அவர்கள் தபால் மூலமும், இ-மெயில் மூலமும் வாக்களித்து இருந்தனர்.
இந் நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மொத்தம் உள்ள 50 மாகாணங்களிலும் நேற்று தொடங்கியது.