எமது நாட்டில் அரசியல் என்பது ஒரு வியாபாரமாகும் என்கிறார் ஜனாதிபதி!

எமது நாட்டில் அரசியல் என்பது ஒரு வியாபாரமாகும் என்கிறார் ஜனாதிபதி!

editor 2

‘திருடப் பழகிய, சட்டவிரோத செயல்களைப் புரிகின்றவர்களை
பாராளுமன்றத்துக்கு கொண்டுவரவே எதிர்க்கட்சியினர் துடிக்கின்றனர். நாட்டை சீராக்குவது எப்படி? நாம் யார் என்பதை காட்டுகிறோம்’- இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

‘இந்தியாவில் ஒரு கியூ. ஆர். கோட் மூலமாக வடை விற்பனை செய்யும் போது எமது நாட்டு மக்கள் 5 ஆயிரம் ரூபாயை வாங்கவும், பத்து கிலோ அரிசி வாங்கவும் அஸ்வெசும பெற்றுக்கொள்ளவும், காணிக்கான உறுதியை தயாரித்துக்கொள்ளவும் வரிசைகளில் நின்று அலைக்கழிய நேரிடுகின்றது.

குறுகிய காலத்துக்குள் இவையனைத்தையும் முற்றாகவே மாற்றிய
மைத்து பிரஜைகளுக்கு நெருக்கமான, வினைத்திறன்மிக்க அரச
சேவையை உருவாக்குவோம்’ என்றும் அநுர கூறினார்.

களுத்துறையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு எதிராக முன்வைத்த பொய்க் குற்றச்சாட்டுகள் காரணமாக மக்கள் குழப்பமடைந்திருந்தார்கள். திசைகாட்டி வெற்றி பெற்று தற்போது ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது.

எமக்கு எதிரான விமர்சனங்கள் எல்லாமே பொய் என்பது உறுதியாகிவிட்டது.

பாராளுமன்றத்துக்கு அனுபவம் வாய்ந்தவர்களை அனுப்பிவைக்குமாறு எதிர்த்தரப்பினர் மேடைகளில் கூறுகிறார்கள். திருடப் பழகிய, சட்டவிரோத செயல்களைப் புரிகின்ற, பாராளுமன்றத்திற்கு மிளகாய்த்தூள் கொண்டுவந்த, கத்தியை எடுத்து வந்த, ஆபாச வார்த்தைகளைக் கூறிய, தவறான தீர்மானங்களுக்கு கையை உயர்த்துகின்ற நற்பழக்கம் கொண்ட, கார் பெர்மிற், பார் பெர்மிற் வாங்கிப் பழகியவர்கள்தான் மீண்டும் வரவேண்டுமெனக் கூறுகிறார்கள்.

ஆனால், நாம் இந்தத்தடவை பாராளுமன்றத்தை புதியவர்களால் நிரப்புங்கள் என்றே கூறுகிறோம். இந்த நாட்டின் அரசியலை சாதகமான ஓர் அரசியலாக மாற்றியமைத்திட வேண்டும்.

எமது நாட்டில் அரசியல் என்பது ஒரு வியாபாரமாகும். மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு வந்து அந்த உறுப்பினர் பலத்தைப் பாவித்து சொத்து சேர்க்கின்றனர். கொழும்பில் வீடுகளையும் காணிகளையும் கொள்வனவு செய்கிறார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் அரசியல் பணத்தை ஈட்டுகின்ற ஒரு வழிவகையாகும் என்றும் அவர் கூறினார்.

Share This Article