கார்கள் மீட்கப்பட்ட விவகாரம்; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன் – ரோஹித்த!

கார்கள் மீட்கப்பட்ட விவகாரம்; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன் - ரோஹித்த!

editor 2

கண்டியில் மீட்கப்பட்ட இரண்டு கார்களிற்கும் தனக்கும் தொடர்பில்லை என முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தான் அரசியலில் இருந்து விலகுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடியில் ஈடுபடுவதற்காக நான் அரசியலில் ஈடுபடவில்லைஇவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் தகவல்களை தெரிவியுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீட்கப்பட்ட கார்கள் எனது உறவினருடையவை என தகவல்கள் வெளியாகியுள்ளன என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சர் எனது சகா ஒருவர் தவறிழைத்தால் அது எனது தவறா நான் அதற்கு காரணமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் குற்றமிழைத்திருந்தால் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துங்கள் என தெரிவித்துள்ள அவர் இரண்டு வாகனங்களிற்கும் எனக்கும் தொடர்புள்ளதாக நிரூபித்தால் நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரோகித அபயகுணவர்த்தனவின் உறவினரின் வீட்டில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு ஆடம்பர வாகனங்களை கண்டி குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

அனிவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 60 மில்லியன் பெறுமதியான பிஎம்டபில்யூ மற்றும் எஸ்யுவி ரகவாகனத்தையும் கண்டி குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

குறிப்பிட்ட வீட்டில் வாகத்தரிப்பிடமொன்றை சோதனையிட்டவேளை இந்த வாகனங்களை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட வாகனங்களிற்கு எவரும் உரிமை கோரவில்லை என்பதால் வாகனங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வீட்டின் உரிமையாளர் கண்டியில் வாகனவிற்பனையில் ஈடுபட்டுள்ளார், ரோகித அபயகுணவர்த்தன துறைமுகங்கள் விவகாரத்திற்கான அமைச்சராக பணியாற்றியவேளை இவர் துறைமுக அதிகாரசபையில் அதிகாரியாக பணியாற்றியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இரண்டு வாகனங்களையும் துறைமுகத்திலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் இரண்டு வாகனங்களையும் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Share This Article