முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு வழங்கப்பட்ட சில வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சாகர காரியவசம் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர் என்ற வகையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், இதனை பொருட்படுத்தாது அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது தவறு என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க புலனாய்வு அமைப்புக்களிடமிருந்து ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு வழங்கப்பட்ட சில வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி செயலகம் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், மகிந்த தற்போது தங்காலை வீட்டில் தங்கியுள்ளதால்,அவர் கொழும்பு திரும்பிய பின்னர் வாகனங்களை கையளிப்பார் என பேச்சாளர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு வழங்கப்பட்ட சில வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சாகர காரியவசம் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர் என்ற வகையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், இதனை பொருட்படுத்தாது அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது தவறு என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க புலனாய்வு அமைப்புக்களிடமிருந்து ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு வழங்கப்பட்ட சில வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி செயலகம் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், மகிந்த தற்போது தங்காலை வீட்டில் தங்கியுள்ளதால், அவர் கொழும்பு திரும்பிய பின்னர் வாகனங்களை கையளிப்பார் என பேச்சாளர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது