முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ள எந்தவொரு வாகனமும் இதுவரையில் மீளப் பெறப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட 16 வாகனங்களில் 8 வாகனங்கள் தற்போது மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்காக தற்போது 11 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் பாவனைக்கு மேலதிகமாக உள்ள வாகனங்களை ஒப்படைக்குமாறு கடிதங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.