9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலையினால் இதுவரை 5,349 குடும்பங்களைச் சேர்ந்த 22,069 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.