தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறீ ரத்நாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்தார்.
இதன்போது, அவர் யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ம. பிரதீபனை சந்தித்து கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலில் தற்போதைய வேட்புமனு கையேற்றல் தொடர்பாகவும் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள்தொடர்பாக யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்தார்.
இக் கலந்துரையாடலில் தேர்தல்கள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளார் எஸ். அச்சுதனும் பங்கேற்றார்.