மஹிந்த காலத்தில் ஆயிரத்து 500 பேருக்கு துப்பாக்கிகள் கையளிப்பு?!

மஹிந்த காலத்தில் ஆயிரத்து 500 பேருக்கு துப்பாக்கிகள் கையளிப்பு?!

editor 2

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் காலப்பகுதியில் அவரது மகன் யோஷித ராஜபக்ஷ, ‘அவன் கார்ட்’ உரிமையாளர் நிஷங்க சேனாதிபதி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 1500 பேருக்கு 1690 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவுக்கு 08 துப்பாக்கிகளும், நிஷங்க சேனாதிபதிக்கு 9 துப்பாக்கிகளும், யோஷித ராஜபக்ஷவுக்கும் 07 துப்பாக்கிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றின் மொத்த எண்ணிக்கை 24 ஆகும். எம்.எம். 09 ரக 16 துப்பாக்கிகளும் அதில் உள்ளடங்குகின்றன. ma

இந்த துப்பாக்கிகளை விரைவில் பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 07 ஆம் திகதிக்கு முன்னர் மீள வழங்கவில்லையெனில் 1916 ஆண்டு 33 இலக்க துப்பாக்கி கட்டளை சட்டத்
திற்கமைய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு
அமைச்சு அறிவித்துள்ளது.

துப்பாக்கிகளுக்கு சொந்தமான ரவைகளை கடற்படைக்குச் சொந்தமான வெலிசறையில் அமைந்துள்ள களஞ்சிய சாலைக்கு குறித்த தினத்துக்கு முன்னர்
வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.

Share This Article