பரீட்சை திணைக்களத்தின் முழுமையான மறுசீரமைப்பு அவசியம் என்கிறார் ஜோசப் ஸ்டாலின்!

பரீட்சை திணைக்களத்தின் முழுமையான மறுசீரமைப்பு அவசியம் என்கிறார் ஜோசப் ஸ்டாலின்!

editor 2

பரீட்சை வினாத்தாள்கள் வெளியேறும் நெருக்கடிக்கு பரீட்சை திணைக்களத்தின் முழுமையான மறுசீரமைப்பு இன்றியமையாதது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை தொடர்பில் கொழும்பில் புதன்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இப்போது தேர்வுத் தாள் நெருக்கடி நீடிக்கிறது. தேர்வுத் துறையின் தோல்வி என்று பொருள். 12.04.2024 அன்று தேர்வுத்துறையில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களின் பட்டியலைத் தேர்வுத்துறை சமர்ப்பித்துள்ளது. பல்வேறு தேர்வுகளில் ஈடுபட்டவர்கள் 473 பேர். இந்த நபர்கள் தேர்வுகளில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 05ம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதா என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த அறிவித்தல் செவ்வாய்க்கிழமை (01) வெளியிடப்பட்டதுடன், அதற்கமைய, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான எந்தவொரு தீர்மானத்தையும் உரிய விசாரணைகள் முடியும் வரை எடுக்க வேண்டாம் என மனித உரிமைகள் ஆணைக்குழு கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article