இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நாடாளவிய ரீதியாக காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
காவல்துறை ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது அமைதியான சூழல் நிலவினாலும் மக்களின் மேலதிக பாதுகாப்பு கருதி காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.
ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கு காலப்பகுதியில் மக்களை தங்களது இருப்பிடங்களிலேயே நேரத்தை செலவிடுமாhறு கோரப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கின்ற தரப்பினர் தங்களது நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள ஆவணத்தை அல்லது கடிதத்தை ஊரடங்கு கால பிரவேச ஆவணமாக பயன்படுத்த முடியும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.