தரம் 5 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

தரம் 5 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

editor 2

2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களமும், பரீட்சைகள் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

விசாரணை நிறைவில், குறித்த பரீட்சையை மீண்டும் நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில், தீர்மானிக்கப்படும்.

அதுவரையில் புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுக்கப் போவதில்லை எனக் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்

Share This Article