அனுராதபுரம் தொடருந்து நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்கள் குழுவொன்று இன்று (18)பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
தொடருந்து நிலையத்திற்குச் சொந்தமான வாகன தரிப்பிடத்தில் வைக்கப்பட்டிருந்த தலைக்கவசமொன்று கொள்ளையிடப்பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தொடருந்து நிலையத்தில் உரிய பாதுகாப்பு இல்லாமையே இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களுக்குக் காரணமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அனுராதபுரத்திலிருந்து கிளிநொச்சி வரையான சில தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.