உடன் அமுலுக்கு வரும் வகையில் இராஜாங்க அமைச்சர்கள் ஐவரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர்களான கீதா குமாரசிங்க, ஷஷீந்திர ராஜபக்ஷ, அமித் தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி. சானக ஆகியோரே இவ்வாறு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.