ஐரோ. ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் – வடக்கு ஆளுநர் சந்திப்பு!

ஐரோ. ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் - வடக்கு ஆளுநர் சந்திப்பு!

editor 2

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்சை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வடக்கு மாகாணத்தின் கள நிலவரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என ஆளுநர் இதன்போது கூறியுள்ளார்.

அமைதியான முறையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த ஆளுநர் மக்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினரிடம் தெரிவித்துள்ளதாக அவரது ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Share This Article