தாழமுக்கம் சூறாவளியாகிறது!

தாழமுக்கம் சூறாவளியாகிறது!

editor 2

மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம், சூறாவளியாக மாறி, எதிர்வரும் இரு தினங்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா கடற்கரையை அடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்காரணமாக வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் 70 முதல் 80 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், மழை பெய்யக்கூடிய சாத்தியமும் நிலவுகிறது. 

எனவே, குறித்த கடற்பகுதியில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Share This Article