வவுனியாவில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மதவாச்சி பிரதேசத்தில் உள்ள வீடொன்றுடன் இருந்த வாகன திருத்தகத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.
விபத்தின் போது, பேருந்தில் 40இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயணித்த நிலையில் அவர்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 06 பேர் மதவாச்சி மருத்துவமனையிலும் 07 பேர் அநுராதபுரம் போதனா மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.