பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் புதிய கூட்டணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
‘பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி’ என்ற பெயரில் இக்கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கான நிகழ்வு இன்று (05) காலை பத்தரமுல்லையிலுள்ள தனியார் விருந்தகமொன்றில் இடம்பெற்றது.
இப்புதிய அரசியல் கூட்டணி “கிண்ணம்” சின்னத்தில் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் அங்குரார்ப்பம் செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த கட்சியின் செயலாளராக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பத்து அரசியல் கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளன.
பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற புதிய அரசியல் கூட்டணி இன்று பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பல முக்கிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவராக பிரதமர் தினேஷ் குணவர்தனவும் செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வின் போது, கூட்டணியின் பெயர் மற்றும் அதன் உத்தியோகபூர்வ சின்னங்கள் வெளியிடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியை ஆதரிக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், உத்தியோகபூர்வ கூட்டணி அமைப்பதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை பலப்படுத்த ஐக்கிய சுதந்திர முன்னணி இலக்கு நிர்ணயித்துள்ளது.