ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று புதன்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்காக 7 இலட்சத்து 12 ஆயிரத்து 321 அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிமனை, மாவட்ட செயலகங்களில் தபால் மூல வாக்குகளை செலுத்த முடியும். இன்றும் நாளை மறுதினமும் சிரேஷ்ட உதவி மற்றும் உதவி பொலிஸ் பணிமனைகள், பொலிஸ் அத்தியட்சகர் பணிமனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பணிமனை பொலிஸ் நிலையங்கள், விசேட அதிரடிப்படை முகாம்கள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவு
பணிமனைகளை சேர்ந்தவர்கள் தமது வாக்குகளை பதிவு செய்ய முடியும்.
நாளையும் நாளை மறுதினமும் முப்படைகளின் முகாம்கள் மற்றும் ஏனைய
அரச திணைக்களங்களை சேர்ந்தவர்கள் வாக்குகளை பதிவு செய்ய முடியும்.
இந்த நாட்களில் வாக்களிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் 11, 12ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம், தேர்தலில் வாக்களிக்க தேசிய அடையாள அட்டை கட்டாய
மாக்கப்பட்டுள்ளது. அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தும்
சந்தர்ப்பம் நேர்ந்தால் தெரிவத்தாட்சி அதிகாரியால் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேணடும் என்று தேர்தல்கள்
ஆணைக்குழு தெரிவித்துள்ளது.