சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற விசேட மாநாட்டில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்ற வேண்டியேற்படுமாயின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும்.
ரூபாவை வலுப்படுத்தி சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் செயற்படுவதன் மூலம் மாத்திரமே பொருட்களின் விலைகளை குறைக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.