ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையில் மாற்றங்களை மேற்கொள்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மீண்டும் வாக்குறுதியளித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கை பொருளாதார வளர்ச்சி
குறித்து கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தொழில்சார் வல்லுநர்களின் தேசிய பேரவை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில்
உரையாற்றுகையில் அவர் இதனை கூறினார்.
அரசாங்கம் கடன் பேண்தகுதன்மை குறித்து மாத்திரம் கவனம் செலுத்தக்
கூடாது, வர்த்தகத்தின் ஏனைய விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் 2029 இல் 3.1 வீதபொருளாதார வளர்ச்சி என்பதை ஏற்றுக்கொண்டுள்ளன. இது போது மானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாங்கள் எங்கள் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையை நோக்கி கொண்டு
செல்லவேண்டும் என தெரிவித்த சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தி பொருளாதார சீர்திருத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் எனவும் கூறினார்