உலகளாவிய ரீதியில் எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவி வரும் நிலையில் இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி விமானநிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் அதிகபடியான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எம்பொக்ஸ் நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் அதனை உலக பொது சுகாதார அவசரகால நிலையாக பிரகடனப்படுத்தியுள்ளது.
அதேநேரம் இதற்கான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் விடயத்துடன் தொடர்புடைய நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது.
இந்தநிலையில், எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சலானது ஆபிரிக்க கண்டத்தின் 13 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.