46 நாட்களில் அரசாங்கத்தின் ஆயுட் காலம் முடிவடையும் என்கிறார் ஜி.எல்.பீரிஸ்!

46 நாட்களில் அரசாங்கத்தின் ஆயுட் காலம் முடிவடையும் என்கிறார் ஜி.எல்.பீரிஸ்!

editor 2

தனிப்பெரும்பான்மையை இந்த அரசாங்கம் இழந்துள்ளது. இன்னமும் 46 நாட்களில் இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடையும் – என்று பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

‘பாராளுமன்றத்தில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் 134 வாக்குகளால் தெரிவான ஜனாதிபதிக்கு 92 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே உள்ளது.

தனிப்பெரும்பான்மையைக்கூட அரசாங்கம் இழந்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் இன்னும் 46 நாட்களில் முடிவடையும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் வெற்றியை உறுதிப்படுத்தும் கொள்கை அடித்தளத்துடன் அண்மையில் உருவாகியுள்ள மாபெரும் கூட்டணி வரும் 8ஆம் திகதி – நாளை மறுதினம் வியாழக்கிழமை உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

நீதித்துறை மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போதைய அரசாங்கம் செயல் பட்டு வருகின்றது. தற்போதைய ஜனாதிபதி நீதித்துறையை செயலிழக்க செய்கிறார் என்று நீதிபதிகள் பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர்’ – என்றார்.

Share This Article