எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவர் நாட்டின் எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும், வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையெனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லையென அந்த ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
எந்தவொரு வாக்காளரும், தங்களுக்குரிய வாக்காளர் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு மாறாக வேறொரு நிலையத்தில் வாக்களிக்க முடியாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது