ரணிலின் தீர்மானத்துக்கு பஸில் எதிர்ப்பு!

ரணிலின் தீர்மானத்துக்கு பஸில் எதிர்ப்பு!

editor 2

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டால் அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கலாம் – அவருக்கு ஆதரவு வழங்கலாம் என்று அறிவுறுத்தினோம். ஆனால், அவர் அதற்கு மதிப்பளிக்கவில்லை. ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பாக நாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சில் ஈடுபட்டபோதே அவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்தமை முற்றிலும் தவறானது என்று பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று மகிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

2022ஆம் ஆண்டு எவ்வித நிபந்தனைகளுமின்றி ஜனாதிபதி ரணில் விக்கிரம
சிங்கவுக்கு ஆதரவு வழங்கினோம்.

ஆனால், கடந்த 2 ஆண்டுகாலமாக அவர் பொதுஜன பெரமுனவின் கட்சிக்கு
முன்னுரிமை வழங்கவில்லை. மாறாக வீழ்ச்சியடைந்த ஐக்கிய தேசியக் கட்சியை எமது ஆதரவை கொண்டு பலப்படுத்தி பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்த
முயற்சிக்கிறார் – இதற்கு இடமளிக்கமுடியாது.

காபந்து அரசாங்கத்தில் பொதுஜன பெரமுனவுக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அவர் சாதகமான பதிலை வழங்கவில்லை.

அத்துடன் பொருளாதார மீட்சிக்காக அவர் எடுக்கும் தீர்மானங்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க முடியாது. அவரின் கொள்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கினால் கட்சி முழுமையாக இல்லாதொழியும். பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் யோசனை முன்வைத்தார்கள். எனவே, சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை மொட்டு சின்னத்தில் களமிறக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டால் அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கலாம் – அவருக்கு ஆதரவு வழங்கலாம் என்று அறிவுறுத்தினோம். ஆனால், அவர் அதற்கு மதிப்பளிக்கவில்லை. கட்சி என்ற ரீதியில் முழுமையாக விட்டுக்கொடுத்து செயல்பட முடியாது – என்றார்.

Share This Article