ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்றாகப் பிளவடைந்துள்ளது. இக் கட்சி உறுப்பினர்கள் மூன்றாகப் பிளவுபட்டு, மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான குழு, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
அத்துடன், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர ஆகியோர் தலைமையிலான குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்குகின்றார்.
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் 31ஆம் திகதி தீர்மானிக்கும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவருமான மஹிந்த அமரவீர முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது