விவாகரத்து சட்டத்தை முற்றிலுமாக நீக்கிவிட்டு, ‘தவறு இல்லாத விவாகரத்து’ என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நீதிஅமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
‘தவறு இல்லாத விவாகரத்து’ தொடர்பான வரைவு சட்டமூலம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.
திருமணம் முறிந்துவிட்டதாக நிரூபணமானால், விவாகரத்து வழக்குகளில் நீண்ட கால விசாரணைகள் இன்றி தீர்ப்பு வழங்க புதிய சட்டமூலம் நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
புதிய பரஸ்பர அங்கீகாரம், பதிவு செய்தல் மற்றும் வெளிநாட்டு தீர்ப்புகளை அமல்படுத்துதல் சட்டமூலம், விவாகரத்து வழக்குகளில் வெளிநாட்டு நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளை இலங்கை நீதிமன்றங்களில் ஏற்றுக்கொள்ள அனுமதிக்கும் என்றும் அவர் கூறினார்.