ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இருந்தபோது மக்கள் கிளர்ச்சியை அடுத்து மாலைதீவுக்கு தப்பியோடினார். 2022 ஜூலை 13ஆம் திகதி அவர் நாட்டிலிருந்து மாலைதீவுக்கு தப்பிச் சென்றிருந்தார். விமானத்தில் அவர் தப்பிச் செல்ல விமானப் படையின் நிதியே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இப்போது அறிய வந்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக இந்தத் தகவல் வெளிப்பட்டுள்ளது கோட்டா கோ ஹோம்’ போராட்டத்தில் பங்கேற்ற பெருந்தொகை மக்கள் கடந்த 2022 ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் என்பவற்றை முற்றுகையிட்டனர்.
அங்கிருந்து தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ஷ பின்னர், மாலைதீவுக்கு தப்பிச் சென்றிருந்தார்.
அவர், அங்கிருந்து தப்பிச் செல்ல விமானப் படையின் விமானம் பயன்படுத்தப்பட்டது. இதற்கான செலவை விமானப் படையே ஏற்றது. எனினும், இந்த பயணத்துக்கான செலவுத் தொகையை விமானப் படை வெளியிடவில்லை.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவர், நிறைவேற்று அதிகாரமுள்ள அரசாங்கத்தின் தலைவர், முப்படைகளின் தளபதி என்ற அடிப்படையில் அவருக்கான செல்வை விமானப் படையே செலுத்தியதாகவும் இதற்கு அரசமைப்பின் சரத்து 30(1) இடமளித்துள்ளதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.
மேலும், 2022 ஜூலை 13 அன்று அதிகாலை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரின் மனைவி மற்றும் இரு மெய்ப் பாதுகாவலர்கள் மாலைதீவுக்கு விமானப்படை விமானத்தில் பயணித்திருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.