யாழ்ப்பாணத்தில் மருந்தகம் ஒன்றில் ஒருவரின் மரணச் சடங்கு நடத்தப்பட்டது தொடர்பில் சுகதார அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் வீடு ஒன்றில் பதிவு செய்யப்பட்ட மருந்தகம் ஒன்று இயங்கி வருகின்றது. இந்த நிலையிலேயே அந்த மருந்தகத்தின் உரிமையாளரின் உறவினர் ஒருவரின் மரணச் சடங்கு அங்கு நடத்தப்பட்டுள்ளது.
மருந்தகத்தில் இரு நாட்கள் சடலம் வைக்கப்பட்டிருந்ததாகவும் இதற்காக மருந்துகள் அங்கிருந்து வேறிடத்துக்கு மாற்றப்பட்டன. அத்துடன், குளிரூட்டியில் பேணப்பட வேண்டிய மருந்துகளும் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தன
என்று கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் உணவு கட்டுப்பாடு, சுகாதார அதிகாரிகள் குறித்த மருந்தகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். எனினும், விசாரணை செய்த அதிகாரிகளுக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.