அரசமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்தை தற்போது ஏன் கொண்டுவரவேண்டும் அதற்கான தேவை என்னவென தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்
இந்து நாளிதழிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலத்தை தற்போது கொண்டுவருவதற்கான அவசியம் என்னவென கேள்வி எழுப்பியுள்ள அவர்எனது பார்வையில் இது ,வாக்காளர்களிற்கு குழப்பத்;தை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.
அரசமைப்பில் ஆணைவழங்கப்பட்டுள்ள படி ஐந்தாண்டு முடிவில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை இது சிக்கலிற்குட்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
22வது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டால் அது குறித்து சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரத்தை அரசமைப்பு ஜனாதிபதிக்கு வழங்குகின்றது என தெரிவித்துள்ள சுமந்திரன் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இது அதனை மேலும் குழப்பத்திற்குள்ளாக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் இது எந்ததாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில் சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவது அவசியமற்ற விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.