உரியநேரம் வரும்போது எமது வேட்பாளர் யார் என்பதை நாம் அறிவிப்போம். மிகப்பலம் வாய்ந்த ஒருவரை ஏனையவர்களின் ஒத்துழைப்புடன் நாம் வேட்பாளராக முன்னிறுத்துவோம். ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் நாம் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை – இவ்வாறு கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ. நேற்று கொழும்பில் செய்தியாளர்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
‘ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும் சிறீலங்கா பொது ஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம்.
ஜனாதிபதித் தேர்தலை வெற்றிக்கொள்ளும் வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்பதே மக்களுக்கு கூறவேண்டிய நற்செய்தி. ‘உரிய நேரம் வரும் போது எமது வேட்பாளர் யார் என்பதையும் அறிவிப்போம். மிகவும் பலம்வாய்ந்த ஒரு வேட்பாளரை நாம் முன்னிறுத்த உள்ளோம். ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் நாம்எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை.
ஏனையவர்களின் ஒத்துழைப்புடனேயே வேட்பாளரை நிறுத்துவோம். நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொது வேட்பாளர் ஒருவரையே நிறுத்தினோம்.
தேர்தலின் பின்னர் எமது அரசாங்கமே அமையும்.’ – என்றும் கூறினார்