காத்தான்குடியில் வெடிவிபத்து! உள்ளூர் தயாரிப்பு என்கிறது பொலிஸ்!

காத்தான்குடியில் வெடிவிபத்து! உள்ளூர் தயாரிப்பு என்கிறது பொலிஸ்!

Editor 1

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பாவிக்கப்பட்ட வெடிகுண்டு சொந்தமாக தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அதனை பரீட்சிக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டனர்.

மட்டக்களப்பு – காத்தான்குடி – பூநொச்சிமுனையில் வீடு ஒன்றின் மீது நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதனால், வீட்டின் ஓடுகள் உடைந்தபோதிலும் எவருக்கும் எந்தப்பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் தகவல் எதுவும் வெளிப்படாத நிலையில் நேற்று சம்பவ இடத்துக்கு சென்ற தடயவியல் பொலிஸார் நடத்திய சோதனையில் வெடிகுண்டே வெடிக்க வைக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

Share This Article