காலி – பூஸா சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பொலிஸ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பூஸா சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகரின் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வீட்டிற்குச் சென்ற அடையாளம் தெரியாத இருவர், அவரது குடும்பத்தினரை அச்சுறுத்தியுள்ளனர்.
இந்த அச்சுறுத்தல் காரணமாகக் குறித்த அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.