அரசாங்கம் கடந்த ஆண்டு ஏனைய அரச ஊழியர்களுக்கு வழங்கிய ஊதியத்துக்கு சமமான தொகையை ஆயுதப்படைகளுக்கு மட்டும் சம்பளமாக வழங்கியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை மூலம் இது வெளிப்பட்டுள்ளது.
அரசின் ஏனைய துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு 32 ஆயிரத்து 729 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது. இதேசமயம், ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸாருக்கு ஊதியமாக 31 ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு படைகள் மற்றும் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட சம்பளம் அரச சேவையின் ஊதியத்தில் 33 சதவீதமாகும்.
கடந்த ஐந்து குறைவுக்கு வழிவகுத்தன. மேலும் கடந்த ஆண்டு (2023) இறுதிக்குள் அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களின் மொத்த எண்ணிக்கையின்படி, பணியாளர்களின் பயன்பாட்டு விகிதம் 77 சதவீதம். 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது நான்கு சதவீதம் குறைந்துள்ளது.
அரச செலவினங்களை குறைக்கும் வகையில் அரச விதித்துள்ள கட்டுப்பாடுகள் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.