நாடளாவிய ரீதியில் உள்ள 200 ற்கும் மேற்பட்ட அரச சேவை தொழிற்சங்கங்கள் நாளை (8) மற்றும் நாளை மறுதினம் (9) சுகவீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
அதேநேரம், எதிர்வரும் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சுகவீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு ஆசிரிய அதிபர் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.