கண்டி நீதிமன்ற வளாகத்தில் கைக்குண்டு இருப்பதாகக் பொலிஸ் அவசர இலக்கமான 119 ற்கு தொலைபேசி அழைப்பு விடுத்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அழைப்பு விடுக்கப்பட்ட சிம் அட்டையின் உரிமையாளர் கினிகத்தேன – கடவல பகுதியில் வைத்து கைதானதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், நேற்றுமுதல் தமது தொலைபேசி காணாமல் போயுள்ளதாக 53 வயதுடைய குறித்த சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஹட்டன் வலயத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொலிஸ் அவசர இலக்கத்திற்கு இன்று காலை கிடைத்த அநாமதேய அழைப்பையடுத்து கண்டி நீதிமன்ற வளாகத்தில் இருந்த பணியாளர்கள் வெளியேற்றப்பட்டு அவசர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
எனினும், அவ்வாறான வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதன் காரணமாக நீதிமன்றத்தின் இன்றைய அனைத்து நடவடிக்கைகளும் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.