சாவகச்சேரியில் விபத்து! மருத்துவர் படுகாயம்!

சாவகச்சேரியில் விபத்து! மருத்துவர் படுகாயம்!

editor 2

மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மருத்துவர் ஒருவர்
படுகாயமடைந்தார்.

ஏ-9 வீதி – சாவகச்சேரி – நுணாவில் பகுதியில் இந்த விபத்து நேற்று முன்தினம்
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்தகாரும் சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதியே விபத்து இடம்பெற்றது.

இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த மருத்துவர் படுகாயமடைந்து சாவகச்சேரி
ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article