சீரற்ற காலநிலையுடன் பத்து மாவட்டங்களில் டெங்கு வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 161 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அத்துடன், இம்மாதம் 20 நாட்களுக்குள் நாட்டில் 2,044 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் இந்த வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 9 ஆகும். இதன்படி, கொழும்பு, கம் பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல், புத்த ளம், காலி, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடடத்தக்கது.