வாடகை வரி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விளக்கம்!

Editor 1

முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர். சாதாரண வருமானம் ஈட்டுபவர்களுக்கு அன்றி, அதிக வருமானம் ஈட்டுவோருக்கே இந்த வரி விதிக்கப்படும். எனவே ஒரு வீடு உள்ள நீங்கள் பயப்பட வேண்டியதில்லை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) உத்தேச வாடகை வரி தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர்  மேலும் கூறுகையில்,

நிதிப் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டபோது நான் பாராளுமன்றத்தில் இல்லாததால், நிதியமைச்சர் என்ற முறையில், வாடகை வருமான வரி குறித்து பாராளுமன்றத்துக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

இதில் மிக அதிக வருமான வரம்பு உள்ளது. நாட்டில் உள்ள 90வீத வீடுகளுக்கு இது பொருந்தாது.எனவே ஒரு வீடு உள்ள நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. உங்கள் வீடு பாதுகாப்பாக உள்ளது. இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தங்கள் வீடுகளைப் பற்றி பயப்பட வேண்டியதில்லை  

ஆனால் நாம் செல்வ வரியை அமுல்படுத்த வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி வருத்தப்படுவதை நான் அறிவேன். அவர்களுடன் இருக்கும் கோடீஸ்வரர்களை இந்த வரி பாதிக்கிறது என்பதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.

முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர். சாதாரண வருமானம் ஈட்டுபவர்களுக்கு அன்றி, அதிக வருமானம் ஈட்டுவோருக்கே இந்த வரி விதிக்கப்படும் என்றார்.

Share This Article