மட்டக்களப்பில் தீ மிதிப்பில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள்!

மட்டக்களப்பில் தீ மிதிப்பில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள்!

Editor 1

மட்டக்களப்பில் அம்மன் ஆலயத்தில் நடந்த தீ மிதிப்பு உற்சவத்தில் தீயில் இறங்கி வெளிநாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேர்த் திக்கடன் செலுத்தினர்.

இலங்கையில் அதிகளவான பக்தர்கள் தீ மிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையைப் பெற்ற கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவம் பல்லாயிரக் கணக்கான அடியவர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மத்திய பிரதேசத்தில் பத்திரகாளியம்மன்
ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை
திருக்கதவு திறத்தல் உற்சவத்துடன் ஆரம்பமானது.

இந்த ஆலயத்தின் வருடாந்த தீ மிதிப்பில் பிற்பகல் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று அம்பாள் கடல்குளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து அம்பாள் ஆலயம் வருகை தந்தவுடன் தீக்குளிக்கு விசேட
பூஜைகள் நடைபெற்று, பக்தர்களின் ஆரோகரா கோசங்களுடன் தீ மிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதேநேரம் இந்த தீ மதிப்பு உற்ச
வத்தில் வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டு தீயில் இறங்கி
நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

Share This Article