இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வரும்; போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மததீவிரவாதிகள் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.
இது குறித்து முழுமையான விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து எங்களின் புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கையுடன் உள்ளனர் என தெரிவித்துள்ள அவர் இந்தியாவிற்கு சென்ற நான்கு இலங்கையர்கள் குறித்து முழுமையான விசாரணைகள் இடம்பெறுகின்றன அவர்களின் சகாக்கள் கூட விசாரிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
தொடரும் விசாரணைகள் குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது ஆனால் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ள நால்வரும் மததீவிரவாதிகள் இல்லை அவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையானவர்கள் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலின்அடிப்படையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் என்ற அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாது நாங்கள் எங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுடன் உள்ளோம் என்பதை பொதுமக்களிற்கு உறுதியாக தெரிவிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.