யாழில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை பூட்டி வைத்தோர் சரணடைந்தனர்!

யாழில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை பூட்டி வைத்தோர் சரணடைந்தனர்!

Editor 1

பரிசோதனைக்கு சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்களை தொழிற்சாலைக்குள் பூட்டி வைத்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பழை – பன்னாலையில் நேற்று திங்கட்கிழமை இந்தச் சம்பவம்
இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

ஐரோப்பிய நாட்டில் வதியும் ஒருவரும் சிங்கள பெண் ஒருவரும் இணைந்து பன்னாலையில் உணவுப் பொருள் தயாரிப்பு நிலையத்தை நடத்தி வந்துள்ளனர்.

இதற்காக அவர்கள் எந்த அனுமதியையும் பெற்றிருக்கவில்லை. இது தொடர்பில் தகவலறிந்த பொது சுகாதார பரிசோதகர்கள் இருவர் நேற்றைய தினம் அங்கு சோதனைக்கு சென்றுள்ளனர்.

அந்தச் சமயம் அங்கிருந்தவர்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்
இருவரையும் நிலையத்துக்குள் வைத்துப் பூட்டியுள்ளனர்.

இது தொடர்பில், தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த பொலிஸார் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை மீட்டனர்.

இதேநேரம், உணவுப் பொருள் தயாரிப்பு நிலைய உரிமையாளரும் பெண்ணும் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் நேற்று மாலை பொலிஸில் சரணடைந்தனர். இதைத் தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Share This Article