ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை அடுத்து இலங்கையில் நாளைய தினம் துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை அரச நிறுவனங்களில் தேசிய கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்கு வானூர்தி விபத்திற்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளார்.
ஈரான் – அஜர்பைஜான் எல்லைப் பகுதியிலிருந்து ஈரான் ஜனாதிபதி, வடகிழக்கு நகரமான தப்ரிஸிற்குச் சென்று மீண்டும் ஈரானுக்குத் திரும்பிய போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதேவேளை, ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தமது எக்ஸ் தளத்தில் இந்த இரங்கலை வெளியிட்டுள்ளார்.