நிலவும் அதிக மழைவீழ்ச்சியுடனான காலநிலை காரணமாக அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம், துனமலே பகுதியில் அதிகரித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அத்தனகலு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள் வெள்ளப்பெருக்கு தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.