மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை கடற்பரப்பில் மீன்பிடி படகொன்று விபத்திற்குள்ளானதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நீண்டநாள் மீன்பிடிப் படகு, அதிக மழையுடனான வானிலையினால்
கப்பல் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்ற குறித்த படகில் ஐந்து மீனவர்கள் பயணித்துள்ளனர்.
இதன்போது, இடம் பெற்ற விபத்தில் நிந்தவூரைச் சேர்ந்த 47 வயதான ஒருவரே
உயிரிழந்துள்ளார்.
விபத்தின் போது 60 வயதான மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், விபத்தில் காயமடைந்த மீனவர் ஒருவர் திருகோணமலை வைத்திய
சாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.