இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படும் பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரி
விக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இந்த கலந்துரையாடல்
இடம்பெற்றுள்ளது.
இதன் போது இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக இன்றைய கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.